குண்டுகளை செயலிழக்க வைக்கும் 200 ரோபோட்களை வாங்கும் இந்திய ராணுவம் !!

  • Tamil Defense
  • August 4, 2020
  • Comments Off on குண்டுகளை செயலிழக்க வைக்கும் 200 ரோபோட்களை வாங்கும் இந்திய ராணுவம் !!

தில்லி ஐஐடி பேராசியரும் ரோபோட்டிக்ஸ் விஞ்ஞானியுமான முனைவர் சுபிர் குமார் சாஹா 104ஆவது இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது இந்தியா முன்னிருந்த நிலையை விட ரோபோட்டிக்ஸ் ஆராய்ச்சி துறையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறினார்.

மேலும் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ரிமோட் மூலமாக இயக்கக்கூடிய “தக்ஷ்” எனும் ரோபோட்டை காவல்துறை, ராணுவம் ஆகியவற்றிற்கு உருவாக்கி உள்ளதாகவும்,

இதனை கொண்டு குண்டுகளை வீரர்களின் உயிருக்கு ஆபத்தின்றி செயலிழக்க வைக்க முடியும் எனவும் இந்திய ராணுவம் இத்தகைய ரோபோட்டுகளில் சுமார் 200ஐ ஆர்டர் செய்துள்ளதாகவும்,

மூன்று நிறுவனங்கள் இந்த ரோபோட்டுகளை தயாரித்த இந்திய ராணுவத்திற்கு வழங்கும் எனவும் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் ட்ரெட்மில் போன்ற நடை பயிற்சி சிமுலேட்டர் ஒன்றையும் தயாரித்து செகந்திராபாத் ராணுவ பயிற்சி மையத்திற்கு வழங்கி உள்ளதாகவும் அவர் கூறினார்.