முத்தரப்பு கோர்க்கா ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் நேபாள வெளியுறவு அமைச்சர் !!
1 min read

முத்தரப்பு கோர்க்கா ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் நேபாள வெளியுறவு அமைச்சர் !!

இந்தியா இங்கிலாந்து மற்றும் நேபாளம் இடையே கடந்த 1947ஆம் ஆண்டு ஒரு முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின் படி நேபாள கோர்க்காளிகள் இங்கிலாந்து மற்றும் இந்திய ராணுவங்களில் பணியாற்ற வழிவகை செய்யப்பட்டது, மேலும் இங்கிலாந்து மற்றும் இந்திய ராணுவ வீரர்களை போன்றே சமமான ஊதியம், வசதிகள், சலுகைகள் மற்றும் ஒய்வூதியம் ஆகியவை வழங்கப்படவும் இது வழிவகை செய்கிறது.

தற்போது நேபாள வெளியுறவு அமைச்சர் ப்ரதீப் குமார் க்யாவாலி இந்த ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

அதாவது இந்த ஒப்பந்தம் அக்காலத்தில் நேபாளிகளின் பிழைப்பிற்காகவும் நலனுக்காகவும் மேற்கொள்ளப்பட்ட ஒன்று எனவும்,

ஆனால் இன்றைய காலகட்டத்திற்கு ஒவ்வாத சில விதிகளை மாற்ற இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகியவை பேச்சுவார்த்தைகளை துவங்க முன்வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இங்கிலாந்து பிரதமராக தெரசா மே அவர்கள் இருந்த காலகட்டத்தில் இங்கிலாந்து சென்ற நேபாள பிரதமர் கே பி ஒலி அவரிடம் இந்த விஷயம் பற்றி பேசியதாகவும் கூறினார்.

இந்திய ராணுவத்தில் தற்போது 1,3,4,5,8,9,11 ஆகிய கோர்க்கா ரெஜிமென்ட்டுகளில் பிரதானமாகவும் வேறு பல ரெஜிமென்டுகளில் சிறிய அளவிலும் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கோர்க்கா மக்கள் மேற்கு வங்கம், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.