இந்தியா,சீனா மற்றும் பாக் இராணுவங்கள் இரஷ்யாவில் போர்பயிற்சி
இந்தியா சீனா மற்றும் இந்திய-பாக் எல்லைப் பகுதிகளில் கடுமையான போர்பதற்றம் நீடித்து வரும் வேளையில் இரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள போர்பயிற்சியில் மூன்று நாட்டு இராணுவங்களும் கலந்து கொள்ள உள்ளன.
கவ்காஸ்2020 எனப்படும் இந்த பயிற்சியில் இந்த மூன்று நாடுகளும் தவிர நிறைய நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
இன்பான்ட்ரி,கவச வாகனப்பிரிவு,சிறப்பு படை ,வான் பாதுகாப்பு மற்றும் சிக்னல்ஸ் ஆகிய பிரிவுகளில் இருந்து சுமார் 180 வீரர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.இது தவிர கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய பிரிவுகளில் இருந்தும் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
சீனா ஒரு படைப்பிரிவும் மூன்று போர்க்கப்பல்களும் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த பயிற்சி அடுத்த மாதம் நடைபெற உள்ளது.இரஷ்யா நடத்த உள்ள இந்த பயிற்சியில் 19 நாடுகளை சேர்ந்த 12500 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.