
இந்திய முகமைகளுக்கு சீனாவின் இராணுவ நகர்வுகளை கவனிக்க இதற்கெனவே அர்பணிக்கப்பட்ட நான்கு முதல் ஆறு செயற்கைகோள்கள் தேவை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
4000கிமீ நீள இந்திய சீன எல்லை மற்றும் சீனாவுக்குள் ஆழ ஊடுருவி கவனிக்க இந்த செயற்கைகோள்கள் உதவும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனா 40000க்கும் அதிகமாக வீரர்கள் ஆர்டில்லரி கனரக ஆயுதங்கள் ஆகியவற்றை எல்லைக்கு விரைவாக நகர்த்தியது இந்திய படைகளுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளனர்.இந்த சம்பவத்திற்கு பிறகே இந்த செயற்கைகோள்கள் தேவை அதிகரித்துள்ளது.
அதிக ரிசோல்யூசன் கொண்ட சென்சார்கள் மற்றும் காமிராக்கள் உதவியுடன் சீனப்படைகளின் நடமாட்டத்தை கவனிக்க முடியும்.
இராணுவத்திடம் ஏற்கனவே சில இராணுவ சேட்டிலைட்டுகள் உள்ளன.ஆனால் தற்போது மேலதிக தேவை உணரப்பட்டுள்ளது.
ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் இன்னும் பதற்றம் தணியவில்லை.சீனப்படைகள் பின்வாங்கவும் இல்லை.