அதிநவீன புதிய ட்ரோன் தயாரிப்பில் இந்தியா; மேலதிக விவரங்கள் உள்ளே !!

  • Tamil Defense
  • August 1, 2020
  • Comments Off on அதிநவீன புதிய ட்ரோன் தயாரிப்பில் இந்தியா; மேலதிக விவரங்கள் உள்ளே !!

பெங்களூர் நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் New Space Research & Technologies எனும் தனியார் நிறுவனம், அரசு நிறுவனமான HAL உடன் ஒரு திட்டத்திற்கு கைகோர்த்து உள்ளது.

இத்திட்டத்தில் சுய சிந்தினை திறன் கொண்ட ட்ரோன்களை உருவாக்க இரு நிறுவனங்களும் திட்டமிட்டு உள்ளன.

இந்த ட்ரோனிற்கு ALFA-S என பெயரிட. பட்டுள்ளது. இதன் விரிவாக்கம் Air Launched Flexible Asset System ஆகும். இது அளவில் சிறியதாக ஆனால் அதிக திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

வெறுமனே 1.5மீ நீளம் கொண்ட இந்த ட்ரோன் ரேடாரில் எளிதில் அகப்படாது, இவற்றின் இயக்க வரம்பு சுமார் 100கிலோ மீட்டர் ஆகும். சென்சார்கள், சீக்கர்கள் மற்றும் வெடிபொருட்களை இவை சுமக்கும்.

இந்த ட்ரோன்கள் ஒரு கலனுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும், அதாவது ஒரு கலனுக்குள் 8 ட்ரோன்கள் இருக்கும். அந்த வகையில் ஒரு தேஜஸ் விமானம் இத்தகைய மூன்று கலன்களில் 24 ட்ரோன்களை கொண்டு செல்லக்கூடிய திறன் பெற்றது.

இந்த ட்ரோன்கள் குழுவாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும் அதாவது ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு சுயமாக சிந்தித்து கொடுக்கப்பட்ட காரியத்தை செவ்வனே நிறைவேற்றும் திறன் கொண்டவையாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.