
இந்தியா-ஜப்பான் நாட்டு பிரதமர்கள் அடுத்த மாதம் சந்திக்க உள்ளனர்.இந்த சந்திப்பின் போது முக்கிய இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே சந்தித்து பேச உள்ளனர்.இந்த சந்திப்பின் போது முக்கிய logistic pact, Acquisition and Cross Servicing Agreement (ACSA) என்ற ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கும் தேதி இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது.அக்டோபரில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச தேவையாப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சீனா என்ற பொது எதிரியால் இரு நாடுகளுமே பாதிக்கப்பட்டு உள்ளது.சென்காகு தீவின் உரிமை காரணமாக சீனா-ஜப்பான் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.கிழக்கு லடாக் பகுதியில் இந்திய-சீனா எல்லைப் பிரச்சனை நடைபெற்று வருகிறது.
சீனாவுக்கு எதிரான அமெரிக்கா,ஆஸ்திரேலியா,ஜப்பான்,இந்தியா என்ற குவாட் கூட்டமைப்பு குறித்தும் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.