
இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக ஆதரித்து வருகிறது.இதற்காக இந்தியாவில் தயாரிக்க 108 அமைப்புகள் மற்றும் துணை அமைப்புகளை அடையாளம் காணப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளன.இந்தியாவில் இந்த அமைப்புகள் தயாரிக்கப்படும் போது இந்தியாவின் பாதுகாப்பு சார் உற்பத்திகள் அதிகரிக்கும்.
இந்த 108 அமைப்புகளை இந்திய நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கும்.இதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியா பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவாக மாறும்.
இந்த அமைப்புகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு டிஆர்டிஓ தொழில்நுட்ப உதவிகள் வழங்கும்.மற்ற நிறுவனங்கள் இதுபோன்ற துணை அமைப்புகளில் கவனம் செலுத்தும் போது டிஆர்டிஓ முக்கிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும்.