மொரிசியஸ் நாட்டின் தென்கிழக்கு கடற்பகுதியில் கப்பலில் எண்ணெய் கசிவு காரணமாக அந்நாடு பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் மொரிசியஸ் நாட்டிற்கு உதவ 30 டன்கள் அளவுள்ள தொழில்நுட்ப பொருள்கள் மற்றும் மெட்டீரியல்களை இந்தியா அனுப்பியுள்ளது.
இந்த ஆயில் கசிவு பிரச்சனையால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை பிரச்சனையை தடுக்க உதவுமாறு மொரிசியஸ் அரசு இந்தியாவிடம் உதவி கேட்டுள்ளது.இதற்கு பிறகு இந்தியா உதவ முடிவெடுத்துள்ளது.
இது போன்றை எண்ணெய் கசிவை மேலாண்மை செய்யக்கூடிய 10 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவும் மொரிசியஸ் அனுப்பப்பட்டுள்ளது.