சீன ஹெலிகாப்டரை அதிநவீன தொழில்நுட்பம் மூலமாக இந்தியா சுட்டு வீழ்த்தியதா !!??

  • Tamil Defense
  • August 2, 2020
  • Comments Off on சீன ஹெலிகாப்டரை அதிநவீன தொழில்நுட்பம் மூலமாக இந்தியா சுட்டு வீழ்த்தியதா !!??

நேற்று இந்தியாவை ஒட்டிய எல்லை பகுதியில் சீன ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மர்மமான மின்காந்த அலைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிகழ்வில் 7 சீன வீரர்கள் இறந்ததாகவும், இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் விபத்து நடந்தது மட்டும் உண்மை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து சீன அரசும் சரி இந்திய அரசும் சரி எவ்வித மறுப்பு செய்தியோ அல்லது ஆமோதிக்கும் வகையிலான செய்தியையோ இதுவரை வெளியிடவில்லை.

இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்னர் சியாச்சின் பகுதியில் காளி எனும் ஆயுதத்தை வைத்து பனிச்சரிவை ஏற்படுத்தியதில் பல பாக் வீரர்கள் இறந்ததாக செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.