தோளில் வைத்து ஏவக்கூடிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளுடன் லடாக்கில் தயாராகும் இந்திய வீரர்கள்

  • Tamil Defense
  • August 25, 2020
  • Comments Off on தோளில் வைத்து ஏவக்கூடிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளுடன் லடாக்கில் தயாராகும் இந்திய வீரர்கள்

கிழக்கு லடாக்கில் முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பகுதிகளில் தோளில் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் ஏந்திய வீரர்கள் தயாராக களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரஷ்யத் தயாரிப்பான இக்லா வான் பாதுகாப்பு ஏவுகணைகளுடன் வீரர்கள் வான் பகுதிகளை காத்து வருகின்றன.இந்திய எல்லைக்குள் நுழையும் எதிரியின் வானூர்திகள்,ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை தாக்கியழிக்க இவை உதவும்.

மலைப்பகுதிகளுக்கு அருகே வரும் பட்சத்தில் எதிரியின் போர் விமானத்தை நோக்கி கூட இந்த ஏவுகணையை ஏவலாம்.

ராடார் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உதவியுடன் இந்திய லடாக் வான் பகுதியில் கண்காணிப்பை தற்போது அதிகப்படுத்தியுள்ளது.

பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் பட்சத்தில் இராணுவ நடவடிக்கை தயாராக உள்ளதாக ஏற்கனவே தளபதி பிபின் ராவத் அவர்கள் கூறியிருந்தார்.