ஏழு சீன தளங்களை தொடர்ந்து கண்காணிக்கும் இந்தியா

  • Tamil Defense
  • August 20, 2020
  • Comments Off on ஏழு சீன தளங்களை தொடர்ந்து கண்காணிக்கும் இந்தியா

எல்லை தொடர்பாக இந்திய சீனா பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ஏழு சீனத் தளங்களை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அருணாச்சல் முதல் லடாக் வரை உள்ள இந்த ஏழு தளங்களிலும் சீனா விமானப்படையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள்.

ஹோடன்,கார் குன்சா,காஷ்கர்,ஹோப்பிங்,ட்கோன்கா ஷோங்,லின்ஷி மற்றும் பங்கத் ஆகிய தளங்களை தொடர்ந்து கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனா இந்த தளங்களை மேம்படுத்தி வருகிறது.கடினமான ஷெல்டர்கள், ஓடு பாதையின் நீளத்தை அதிகப்படுத்துதல், அதிக வீரர்களை குவித்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது.

சீனா இந்த தளங்களில் போர் விமானங்களை குவித்து வருகிறது.தவிர மற்ற பகுதிகளில் குண்டுவீசு விமானங்களையும் குவித்து வருகிறது.

இந்தியாவும் நமது பகுதிகளில் சுகாய்,மிக் போன்ற விமானங்களை குவித்து வருகிறது.சீனா எந்தவித ஆக்சன் எடுத்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளது.