மீண்டும் மேஜர் ஜெனரல்கள் அளவிலான பேச்சுவார்த்தை-என்ன நடந்தது?

  • Tamil Defense
  • August 9, 2020
  • Comments Off on மீண்டும் மேஜர் ஜெனரல்கள் அளவிலான பேச்சுவார்த்தை-என்ன நடந்தது?

சனியன்று மீண்டும் ஒரு முறை இந்திய சீன நாட்டு இராணுவ உயர் அதிகாரிகள் எல்லைப் பிரச்சனை தொடர்பாக சந்தித்து பேசியுள்ளனர்.தௌலத் பெக் ஓல்டி மற்றும் தெஸ்பங் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைவிலக்கம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தௌலத் பெக் ஓல்டி பகுதியின் சீன எல்லைக்குள் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.ஐந்தாம் கட்ட கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த மேஜர் ஜெனரல்கள் தலைமையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது.

பேச்சுவார்த்தையின் போது இந்திய இராணுவம் முழு படைவிலக்கம் குறித்து பேசியுள்ளது.மே 5க்கு முன் இருந்த பழைய நிலைக்கு சீன இராணுவம் திரும்ப வேண்டும் என கூறியுள்ளது.

கல்வான் மற்றும் மற்ற சில பகுதிகளில் இருந்து வெளியேறினாலும் பங்கோங்கின் பிங்கர் பகுதிகள் மற்றும் கோக்ரா ,தெஸ்பங் பகுதிகளில் இருந்து இன்னும் வெளியேறாம் உள்ளது.

சில நாட்களுக்கு முன் அருணாச்சல் சென்று வந்த தளபதி நரவனே அங்குள்ள பீல்டு கமாண்டர்களிடம் உட்ச பட்ச உசார் நிலையில் இருக்குமாறும் உடனடி ஆபரேசன்களுக்கும் தயார் நிலையில் இருக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.