இஸ்ரேலிடம் இருந்து அவாக்ஸ் விமான அமைப்பு வாங்கும் இந்தியா

  • Tamil Defense
  • August 27, 2020
  • Comments Off on இஸ்ரேலிடம் இருந்து அவாக்ஸ் விமான அமைப்பு வாங்கும் இந்தியா

இந்தியா சுமார் 1 பில்லியன் டாலர்கள் செலவில் இஸ்ரேலிடம் இருந்து இரு அவாக்ஸ் விமானங்கள் பெற உள்ளது.இதற்கு இரு முறை ஆர்டர் தாமதபடுத்தப்பட்டு தற்போது மீண்டும் வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் பால்கன் ரேடார் அமைப்பை இரஷ்யாவின் ஐஎல்-76 விமானத்தில் இணைந்து இந்த அவாக்ஸ் விமானம் பெறப்படும்.பறக்கும் ரேடார் என இந்த அமைப்பை கூறலாம்.

இந்த புதிய இரு விமானங்கள் மூன்று முதல் நான்கு வருடத்தில் படையில் இணையும்.இதற்கு முன் படையில் இணைக்கப்பட்டுள்ள இதே போன்ற மூன்று விமானங்களை விட இந்த இரு விமானங்கள் நவீனமானதாக இருக்கும்.

பாக் மற்றும் சீன எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளதால் இந்த பறக்கும் ரேடார்களின் தேவை அதிகமாக உணரப்பட்டுள்ளது.

தரை ரேடார்களை விட வானில் பறக்கும் இந்த ரேடார் எதிரியின் விமானங்கள்,ஏவுகணைகள் போன்றவற்றை முன்னமே அறிந்து நமது விமானங்களை வழிநடத்த உதவும்.

பாக்கிடம் நம்மை விட அதிகமான அவாக்ஸ் விமானங்கள் உள்ளன.அவர்களிடம் 8-10 Chinese Karakoram Eagle ZDK-03 AWACS மற்றும் Swedish Saab-2000 AEW&C உள்ளன.சீனாவிடம் 30 விமானங்கள் உள்ளன.

இந்தியாவிடம் மூன்று Phalcon அவாக்ஸ் மற்றும் இரு நேத்ரா அவாக்ஸ் விமானங்கள் மட்டுமே உள்ளன.