
இந்திய பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைகள் குறித்து இந்தியாவின் வெளியுறவு அமைச்சரும் அமெரிக்க செயலர் மைக் பாம்பியோ அவர்களும் உரையாடியுள்ளனர்.ஆப்கனில் அமைதி மற்றும் கோவிட்-19 குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் உரையாடினர்.
இந்திய பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு,கோவிட் -19 காலத்தில் ஒருங்கிணைந்து செயல்படுதல் ,ஆப்கன் மற்றும் இந்த பிராந்தியத்தின் அமைதி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
கொரானாவை அடுத்து எல்லை மோதல் காரணமாக இந்திய அமெரிக்க உறவு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.சீனாவின் ஆக்கிரமிக்கும் குணம் தற்போது உலக பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என அமெரிக்க செயலர் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தான் சீனாவுக்கு எதிரான ஒரு உலக ஒருங்கிணைப்புக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது.மேலும் சீனாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா ,ஜப்பான் ஆகியவை இந்தியாவிற்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளது.