சீனாவுக்கு எதிரான நால்வர் கூட்டனி; பலத்தை அதிகரிக்க முடிவு

  • Tamil Defense
  • August 8, 2020
  • Comments Off on சீனாவுக்கு எதிரான நால்வர் கூட்டனி; பலத்தை அதிகரிக்க முடிவு

இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை நடைபெற்று வரும் வேளையில் குவாட் எனப்படும் நால்வர் கூட்டனியின் பலத்தை அதிகரிப்பது குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.விரைவில் நான்கு நாட்டின் வெளியுறவு அமைச்சர் சந்திப்பும் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவாட் எனப்படுவது நான்கு நாடுகள் கூட்டமைப்பு ஆகும்.இந்தியா,அமெரிக்கா,ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா தான் அந்த நான்கு நாடுகள் ஆகும்.இந்த கூட்டமைப்பு எந்த குறிப்பிட்ட நாட்டுக்கும் எதிரானது அல்ல என கூறப்பட்டாலும் நாம் தெளிவாகவே இது சீனாவுக்கு எதிரான கூட்டமைப்பு என புரிந்து கொள்ள முடியும்.

இந்த குவாட் கூட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க செயலர் மைக் பாம்பியோ அவர்கள் உரையாடியுள்ளனர்.

இது தவிர கொரானா யுத்தம்,பிராந்திய அமைதி குறித்தும் இருவரும் உரையாடியுள்ளனர்.