
சமீப காலமாக பாகிஸ்தான் ராணுவம் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இந்திய எல்லைகளில் அத்துமீறுவது வீரர்களை தாக்குவது போன்ற அடாவடித்தன செயல்களை அரங்கேற்றி வந்தது.
இந்த நிலையில் இன்று ஆஃப்கானிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பஜாவ்ர் பகுதியில் கடுமையான தாக்குதல்களை துவங்கி உள்ளது.
அதை போல இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளதாக்கு பகுதியில் பயங்கரவாத முகாம்களை கடுமையாக தாக்கி வருகிறது.
ஆக பாகிஸ்தானின் இரு புறமும் தாக்குதல் நடைபெற்று வருகிறது, இதன் காரணமாக பாகிஸ்தான் தரப்பில் கடும் உயிர் சேதங்கள் ஏறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.