லடாக்கின் எல்லைப் பகுதிக்கு செல்ல மூன்றாவது வழி ; கட்டுமானம் நடைபெறுகிறது

  • Tamil Defense
  • August 19, 2020
  • Comments Off on லடாக்கின் எல்லைப் பகுதிக்கு செல்ல மூன்றாவது வழி ; கட்டுமானம் நடைபெறுகிறது

லடாக்கில் உள்ள பாக் மற்றும் சீன முனைகளுக்கு எதிரிகளின் கண்ணுக்கு அகப்படாமல் படை நகர்வு செய்ய தற்போது புது சாலை கட்டுமானம் நடைபெறுகிறது.மனாலி வழியாக லே செல்லும் சாலை கட்டுமானம் தற்போது நடைபெற்று வருகிறது.

லடாக்கின் தௌலத் பெக் ஓல்டி உள்ளிட்ட வடக்கு சப் செக்டாருக்கு செல்ல இந்தியா மாற்று வழிகளை உருவாக்கி அங்கு சாலைகள் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த புதிய சாலை வழியாக சென்றால் மூன்று முதல் நான்கு மணி நேர பயணம் மிச்சமாகும்.இதன் மூலம் மிக வேகமாக தளவாடங்களை எல்லைக்கு நகர்த்த முடியும்.

சாலை அமைக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.