முக்கிய சீன உளவாளி தலைநகர் தில்லியில் கைது, பல முக்கிய தகவல்களை திரட்டியதாக தகவல் !!

  • Tamil Defense
  • August 13, 2020
  • Comments Off on முக்கிய சீன உளவாளி தலைநகர் தில்லியில் கைது, பல முக்கிய தகவல்களை திரட்டியதாக தகவல் !!

தலைநகர் தில்லியில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹவாலா பண பரிமாற்றம் செய்து வந்த சார்லி பெங் என்ற நபர் கைது செய்யப்பட்டார், அப்போது அவரிடம் போலி இந்திய பாஸ்போர்ட், 10 வங்கி கணக்குகள் இருந்தது தெரிய வர,

மேலதிக விசாரணையை தில்லி காவல்துறை மூடுக்கி விட்டது அப்போது சார்லி பெங்கின் உண்மையான பெயர் லுவோ ஸாங் எனவும் மிகப்பெரிய ஹவாலா கும்பலை வழிநடத்தி வருவதும் தெரிய வந்தது, மேலும் இவருக்கு சுமார் 40 வங்கி கணக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து தில்லி, குர்காவன், காஸியாபாத் ஆகிய நகரங்களில் 21 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர் இதில் மிகப்பெரிய ஹவாலா கும்பல் சிக்கியது.

லுவோ சாங் மீது சந்தேகம் வலுக்க தீவிர விசாரணை நடத்தப்பட்டது, அப்போது அவர் சீன உளவாளி எனும் அதிர்ச்சி தகவல் வெளி வந்தது, கடந்த 2012 ஆம் ஆண்டு திபெத் தலைநகர் லாசாவில் வைத்து சீன உளவுத்துறையால் தேர்வு செய்யப்பட்ட இவன் நேபாள தலைநகர் காத்மாண்டுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்,

அங்கு சீன தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஹவாலா நடவடிக்கைகள், பண பரிமாற்றம் மற்றும் வங்கிகள் சாரந்த விஷயங்களில் பயிற்சி பெற்று கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவுகாகுள் ஊடுருவி மணிப்பூர் மாநிலத்தில் குடியேறி அங்கு ஒருவரை திருமணம் செய்து கொண்டான்.

பின்னர் அங்கிருந்து தலைநகர் தில்லியின் துவாரகா பகுதிக்கு குடி பெயர்ந்துள்ளான், பின்னர் அங்கிருந்து குர்காவன் நகருக்கு குடி பெயர்ந்துள்ளான்.

இப்படி இந்தியாவில் வாழும் திபெத்திய அகதிகள் சமுகத்தின் முக்கிய உறுப்பினர்கள், தலாய் லாமா மற்றும் அவருக்கு நெருகாகமானவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து உள்ளான்.

தனது உளவு நடவடிக்கைகளை மறைக்கவே ஹவாலா நடவடிக்கைளை அவன் பயன்படுத்தி கொண்டுள்ளான், கடந்த சில ஆண்டுகளில் இவன் சுமார் 1000 கோடி ருபாய் அளவிலான ஹவாலா பரிமாற்றம் செய்துள்ளான்.

இவனிடம் இருந்து ஒரு டொயோட்டா ஃபார்ச்சூனர் காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.