
சீனாவுடனான மோதல் அதிகரித்து வரும் வேளையில் விமானப்படை தேஜஸ் விமானங்களை பாகிஸ்தான் எல்லையில் நிலைநிறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்க மேற்கு முனையான பாகிஸ்தான் எல்லையில் தேஜஸ் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல் தேஜஸ் ஸ்குவாட்ரான் ஆன 45வது ஸ்குவாட்ரான் பிளையிங் டேக்கர்ஸ் சூலூரில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.அது தற்போது மேற்கு முனைக்கு நகர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல் ஸ்குவாட்ரான் விமானங்கள் அனைத்தும் Initial Operational Clearance (IOC) வகை ஆகும்.இரண்டாம் ஸ்குவாட்ரான் Final Operational Clearance (FOC) வகை தேஜஸ் விமானங்களை பெற்றிருக்கும்.
இது தவிர புதிய 83 Mark- 1A ரக விமானங்கள் இந்த வருட இறுதிக்குள் ஆர்டர் செய்யப்பட உள்ளது.