
டெல்லியில் ஐஎஸ் பயங்கரவாதி ஒருவன் கைது செய்யப்பட்ட பிறகு உத்திரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் பகுதியில் இருந்து அதிக அளவிலான வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நேற்று கைது செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாதி பல்ராம்பூர் பகுதியை சேர்ந்தவன் ஆவான்.
நேற்று டெல்லியின் தௌலா குவான் ஏரியாவில் நடைபெற்ற என்கௌன்டருக்கு பிறகு டெல்லி காவல்துறை ஐஎஸ் பயங்கரவாதி ஒருவனை கைது செய்தனர்.
அவனிடம் இருந்து இரு கண்ணி வெடிகள் பறிமுதல் செய்தது காவல்துறை.அப்துல் யூசுப் கான் என அடையாளம் காணப்பட்டுள்ள அவன் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவன் ஆவான்.
காவல்துறைக்கு அவனது இருப்பிடம் குறித்த தகவல் கிடைத்ததும் அவனை கைது செய்ய விரைந்துள்ளனர்.அப்போது துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
அதன் பிறகு அவனை காவல்துறையினர் கைது செய்தனர்.