உறவுகளை புதுப்பிக்கும் இஸ்ரேல் மற்றும் அரபு அமீரகம்-முழுத் தகவல்கள்

  • Tamil Defense
  • August 13, 2020
  • Comments Off on உறவுகளை புதுப்பிக்கும் இஸ்ரேல் மற்றும் அரபு அமீரகம்-முழுத் தகவல்கள்

அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தங்களது உறவுகளை புதுப்பிக்க ஒப்புக்கொண்டுள்ளன.இதன் மூலம் இரு நாடுகள் இராஜாங்க உறவு ஏற்படுத்தி தங்களுக்கு இடையே உள்ள பதற்றத்தை குறைக்க உள்ளன.

இந்த ஒப்பந்தம் மூலம் வெஸ்ட் பேங்க் எனப்படும் மேற்கு கரை
பகுதிகளை இஸ்ரேல் ஆதிக்கத்திற்கு கொண்டு வரும் முடிவை கைவிடும்.

உறவுகளை நார்மல் ஆக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு,அபு தாபி இளவரசர் சேக் முகமது மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோர் தொலைபேசி மூலம் நடந்த உரையாடலில் முடிவு செய்தனர்.

இதை பெரும் வரலாற்று சம்பவம் என குறிப்பிட்ட அதிபர் ட்ரம்ப் மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளிடமும் இதே போன்றதொரு ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சிசெய்வதாக கூறினார்.

கிட்டத்தட்ட 49 ஆண்டுகளுக்கு பிறகு இரு நாடுகளின் உறவு புதுப்பிக்கப்படுகிறது.இந்த ஒப்பந்தம் வருகிற வாரங்களில் வெள்ளை மாளிகையில் கையெழுத்தாக உள்ளது.