Breaking News

லடாக்கில் ஆபரேசனை தொடங்கிய இந்திய தயாரிப்பு தாக்கும் வானூர்தி

  • Tamil Defense
  • August 12, 2020
  • Comments Off on லடாக்கில் ஆபரேசனை தொடங்கிய இந்திய தயாரிப்பு தாக்கும் வானூர்தி

எல்லையில் தற்போது நடைபெற்று வரும் சூழ்நிலை காரணமாக இந்தியாவின் ஹால் நிறுவனம் தயாரித்துள்ள இரு தாக்கும் வானூர்திகள் லே செக்டாரில் அதிஉயர் மலைப்பகுதி ஆபரேசன்களை தொடங்கியுள்ளது.

உலகிலேயே மிக இலகுரக தாக்கும் வானூர்தியான இந்த எல்சிஎச் இந்தியாவின் ஹால் நிறுவனம் வடிவமைத்து மேம்படுத்தியது ஆகும்.

முன்னனி எல்லைப்புறங்களில் செயல்பட இந்த வானூர்தி ஏற்றது.ஏற்கனவே லடாக்கின் அதிஉயர் பகுதிகளில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பகல் மற்றும் இரவு என இரண்டிலும் இலக்குகளை துல்லியமாக தாக்க வல்லது.மற்றும் அதற்கான நவீன ஆயுதங்களையும் பெற்றுள்ளது.

இந்திய இராணுவம் மற்றும் விமானப்படைக்கு மொத்தமாக 160 வானூர்திகள் தற்போது தேவையாக உள்ளது.முதல் தொகுதியாக 15 வானூர்திகள் வாங்க பாதுகாப்பு தளவாட கொள்முதல் அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.