
காஷ்மீரை மூன்றாக இந்தியா பிரித்ததின் முதலாம் ஆண்டை ஒட்டி பாக்கில் நடைபெற்ற பேரணியில் சிந்துதேஷ் புரட்சி இராணுவம் நடத்திய கிரேனேடு தாக்குதலில் 30பேர் காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டதாக அங்குள்ள அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனங்களிடம் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு சிந்துதேஷ் புரட்சி இராணுவம் பொறுப்பேற்றுள்ளதாக பாக் காவல்துறை கூறியுள்ளது.
கடந்த ஜீன் மாதம் சிந்துதேஷ் இராணுவம் நடத்திய தாக்குதலில் பாக் இராணுவத்தினர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
சிந்து பகுதியை பாக்கின் ஆளுகையில் இருந்து பிரித்து தனி நாடாக ஆக்குவது தான் இந்த படையின் குறிக்கோள் ஆகும்.இந்த படையும் பலுசிஸ்தான் சுதந்திர படையும் இணைந்து செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.