பாரமுல்லா தாக்குதலில் ஐந்து வீரர்கள் வீரமரணம்

  • Tamil Defense
  • August 18, 2020
  • Comments Off on பாரமுல்லா தாக்குதலில் ஐந்து வீரர்கள் வீரமரணம்

பாரமுல்லா என்கௌன்டரின் போது படுகாயமுற்று சிகிச்சை பெற்று வந்த இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.ரோந்து சென்ற சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்கியதில் இரு சிஆர்பிஎப் வீரர்களும் ஒரு காஷ்மீர் காவல்துறை வீரரும் வீரமரணம் அடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு பழிதீர்க்க பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் தேடி வேட்டையாடினர்.

இந்த தாக்குதலில் முக்கிய கமாண்டர் உட்பட மூன்று பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தினர்.இந்த சண்டையின் போது இரு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.அதில் ஒரு வீரர் திங்கள் அன்று வீரமரணம் அடைந்தார்.மற்றொரு வீரர் இன்று வீரமரணம் அடைந்தார்.