லடாக்கில் முதல் அனைத்து காலநிலை சாலை; விரைவில் முடிக்க திட்டம்

  • Tamil Defense
  • August 26, 2020
  • Comments Off on லடாக்கில் முதல் அனைத்து காலநிலை சாலை; விரைவில் முடிக்க திட்டம்

கார்கிலின் ஜான்ஸ்கார் பள்ளத்தாக்கு வழியாக ஹிமாச்சலின் டார்ச்சா மற்றும் நிமு பகுதிகளை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து காலநிலை சாலையை விரைந்து முடிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

சீனா மற்றும் பாக் சியாச்சின் மற்றும் தௌலத் பெக் ஓல்டி பகுதிகளின் மீது கவனம் செலுத்தி வரும் வேளையில் லடாக்கி இணைக்கும் மூன்றாவது சாலை அவசர தேவையாக உள்ளதாக முக்கிய இராணுவ கமாண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நிமு என்னும் பகுதி லே பகுதியில் இருந்து 35கிமீ தொலைவில் உள்ளது.மற்றும் இங்கு தான் XIV கார்ப்ஸ் தலைமையகம் உள்ளது.கிழக்கு லடாக் மற்றும் சியாச்சினை காக்கும் பொறுப்பு இந்த கார்ப்ஸ் பிரிவிடம் தான் உள்ளது.

இந்த சாலையை விரைந்து முடிக்க சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் முன்னாள் தளபதி விகே சிங் அவர்கள் முன்னுரிமை அளித்து வருகின்றன.