போர் தயார் ஆகிறதா? பாங்கோங்கில் வெறியேறுவது பற்றியே பேச மறுக்கும் சீனா

  • Tamil Defense
  • August 2, 2020
  • Comments Off on போர் தயார் ஆகிறதா? பாங்கோங்கில் வெறியேறுவது பற்றியே பேச மறுக்கும் சீனா

இந்திய சீன எல்லையில் பதற்றத்தை குறைக்கும் வகையில் இரு நாட்டு இராணுவ கமாண்டர்களும் ஞாயிறு அன்று சந்தித்து பேசினர்.இந்த பேச்சுவார்த்தையின் போது பாங்கோங் ஏரியில் பிங்கர் பகுதியில் இருந்து பின்வாங்குவது குறித்தே சீன இராணுவம் பேச மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காலை 11.30மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை சீனப்பகுதியான மோல்டோ எனுமிடத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் சீனவீரர்கள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு கட்டுமானங்களை எழுப்பி வருகின்றனர்.அமைதியை விரும்புபவர்கள் ஒருபோதும் செய்யக்கூடாத விசயம் இது.

லடாக் செக்டாரில் கிட்டத்தட்ட இருநாடுகளும் 100000 என்ற அளவில் படைகளை குவித்துள்ளன.