1 min read
இன்று இந்திய சீன ராணுவ கமாண்டர்கள் இடையே 5ஆம் சுற்று பேச்சுவார்த்தை !!
இந்திய சீன எல்லை பிரச்சினை விவகாரம் குறித்து விவாதிக்க இன்று இந்திய சீன ராணுவ கமாண்டர்கள் இடையே ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
லடாக்கின் சுஷூல் பகுதியில் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையின் போது கோக்ராவில் உள்ள பி17ஏ பகுதி மற்றும் பாங்காங் ஸோ ஏரி அருகே உள்ள ஃபிங்கர்8 முதல் 5 வரையிலான பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் முக்கிய இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் சீனா உத்தராகண்ட் எல்லையோரமும் வீரர்களை குவித்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.