
சமீப காலமாக அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உரசல் அதிகரித்து வருகிறது, அதுவும் தென்சீன கடல் பகுதியில் மிகவும் பதற்றமான நிலை உள்ளது.
இந்நிலையில் சீன அரசு தனது கடற்படை மற்றும் விமானப்படையினருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது அதில் அமெரிக்க படையினருடன் உரசல் ஏற்பட்டால் முதலில் தாக்க வேண்டாம் எனவும் பொறுமை காக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.
காரணம் அமெரிக்கர்கள் முதலில் தாக்குவதையே சீனா எதிர்பார்க்கிறது ஏனெனில் அப்போது தான் நியாயம் என்பதை காரணம் காட்டி திருப்பி குறுகிய காலத்தில் அதிக வலிமையுடன் பதிலடி கொடுக்க முடியும்.
கடந்த 2001ஆம் ஆண்டு சீன விமானப்படை விமானம் ஒன்றும் அமெரிக்க ரோந்து விமானம் ஒன்றும் ஹைனான் தீவுக்கு அருகே மோதியதில் சீன விமானி கொல்லப்பட்டார், அமெரிக்க விமானம் ஹைனான் தீவில் தறை இறங்க பணிக்கப்பட்டது,
பின்னர் அமெரிக்க அரசு மற்றும் சீன அரசு இடையிலான ராஜாங்க நடவடிக்கைகளுக்கு பின்னர் அமெரிக்க விமானிகளும் விமானமும் விடுவிக்கப்பட்டது,
இத்தகைய சம்பவம் தற்போது நடந்தால் அமெரிக்கர்கள் உயிருடன் வீடு திரும்புவது சாத்தியமில்லை என சீன ராணுவ நிபுணர் ஒருவர் கூறுகிறார்.
அதாவது இன்று சீன ராணுவ வலிமை பன்மடங்கு அதிகரித்து உள்ளதாகவும் ஏதேனும் மோசமான நிலையில் நிலை ஏற்ப்ட்டு போர் வெடித்தால் சீனாவும் சரி அமெரிக்காவும் சரி அதன் பின்விளைவுகளை தீர்மானிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.