சமரசம் கிடையாது, முன்னாடியே வெளியேறுங்கள்…! பேச்சுவார்த்தையில் சீனாவை எச்சரித்த இந்தியா

  • Tamil Defense
  • August 4, 2020
  • Comments Off on சமரசம் கிடையாது, முன்னாடியே வெளியேறுங்கள்…! பேச்சுவார்த்தையில் சீனாவை எச்சரித்த இந்தியா

திங்கள் அன்று நடைபெற்ற ஐந்தாவது இந்திய சீனா பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை இராணுவ அதிகாரிகள் இராணுவ தளபதிக்கு விளக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மிக விரைவாக பங்கோங் மற்றும் மற்ற மோதல் பகுதிகளில் இருந்து சீனப்படைகள் பின்வாங்க வேண்டும் எனவும் இந்திய ஒருங்கிணைப்பு தன்மையை இந்தியா ஒரு போதும் விட்டுக்கொடுக்காது என திடமாக இந்தியா தனது பதிலை சீனாவுக்கு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை சீனாவின் மோல்டோ பகுதியில் 11 மணி நேரம் நடைபெற்றுள்ளது.

சீனா சில பகுதிகளில் இருந்து படைக்குறைப்பு செய்தாலும் பங்கோங் மற்றும் இன்னும் சில பகுதிகளில் இருந்து இன்னும் வெளியேறாமல் உள்ளது.கோக்ரா பகுதியில் இருந்தும் இன்னும் வெளியேறவில்லை.