
பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முக்கிய இராணுவ அதிகாரிகள் சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக சந்தித்து பேச உள்ளனர்.சீன எல்லைப் பிரச்சனை மூன்று மாதங்களாக தொடர்ந்து வருகிறது.மேலும் சீனப்படைகள் பின்வாங்காமல் பிடிவாதமாக உள்ளன.
ஒருங்கிணைந்த படைத் தளபதி பிபின் ராவத்,இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் , விமானப்படை தளபதி பதாரியா மற்றும் கடற்படை தளபதி கரம்பிர் சிங் ஆகியோரும் இந்த கூட்டத்தில் சந்தித்து பேசி உள்ளனர்.
இதற்கு முன்பு தான் இராணுவத்தின் முக்கிய தளபதிகள் எல்லைப் பிரச்சனை தொடர்பாக சந்தித்து பேசி உள்ளனர்.
பேச்சுவார்த்தைகளின் போது சீன கமாண்டர்கள் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஏற்கனவே ஐந்து முறை இரு நாடுகளும் சந்தித்து பேசி உள்ளன.ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.அடுத்த பேச்சுவார்த்தை எப்போது என்ற முடிவும் செய்யப்படவில்லை.
பங்கோங் ஏரி மற்றும் தெஸ்பங் பகுதியில் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் சீனர்கள் உள்ளனர்.