
பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இராணுவ கொள்முதல் கூட்டத்தில் பாதுகாப்பு படைகளுக்காக சுமார் Rs 8,722.38 கோடிகள் செலவில் ஆயுதங்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
HTT-40 எனும் பயற்சி விமான தயாரிப்பை ஹால் மேம்படுத்தி தற்போது சான்றிதழ் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஹால் நிறுவனத்திடம் இருந்து 106 அடிப்படை பயிற்சி விமானங்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதை தவிர கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்களில் பொருத்தப்படுவதற்கான சூப்பர் ரேபிட் கன் மௌன்ட் எனப்படும் துப்பாக்கிகள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவை இந்தியாவின் பெல் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும்.
தவிர 125 mm APFSDS (Armour Piercing Fin Stabilized Discarding Sabot) குண்டுகள் இராணுவத்திற்காக பெறப்பட உள்ளது.இவை 70% உள்நாட்டு பொருள்களை கொண்டிருக்கும்.
தவிர ஏகே203 துப்பாக்கிகள் வாங்குவதை துரிதப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.