விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளத்தில் விபத்து 11 பேர் பலி !!
1 min read

விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளத்தில் விபத்து 11 பேர் பலி !!

விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளம் நாட்டின் கடற்படை கப்பல்களை கட்டி தரும் மிக முக்கியமான நிறுவனமாகும்.

இந்த தளம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையை சேர்ந்த அனுபம் க்ரேன் நிறுவனத்திடம் இருந்து சுமார் 50கோடி மதிப்பிலான ஒர் க்ரேனை வாங்கியது.

ஐந்து ஆண்டுகள் ஆகியும் மேற்குறிப்பிட்ட நிறுவனம் க்ரேனை சோதனை செய்யவில்லை ஆகவே ஹிந்துஸ்தான் நிறுவனமும் முழு பணத்தை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் இன்று ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளம், மேற்குறிப்பிட்ட நிறுவனத்தின் உதவி இன்றி க்ரீன் ஃபீல்டு எனும் நிறுவனத்தின் உதவியோடு க்ரேனை சோதித்து பார்க்க முடிவு செய்தது.

சோதனையில் முழு கொள்ளளவுடன் க்ரேன் நகர்த்தப்பட்டது அப்போது தீடிரென நடுப்பகுதியில் க்ரேன் உடைந்து கீழே விழுந்தது.

இதில் 11பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர், 10பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஒருவரின் உடல் மட்டும் இன்னும் மீட்கப்படவில்லை.

இந்த நிகழ்வு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தில் ப்ரசாத், ரமணா, சத்யா ராஜூ, ஜகன், நாக தேவூடு, பாஸ்கர், வெங்கட ராவோ, சிவா மற்றும் சைதன்யா, ரத்னம் ஆகியோர் பலி ஆகியுள்ளனர்.