கொரானாவால் தாமதமாகும் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு டெலிவரி ?

  • Tamil Defense
  • August 25, 2020
  • Comments Off on கொரானாவால் தாமதமாகும் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு டெலிவரி ?

கொரானா வைரஸ் காரணமாக எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு டெலிவரி பாதிக்கப்படாது என இரஷ்யாவிற்கான இந்திய தூதர் வெங்கடேஷ் வர்மா அவர்கள் கூறியுள்ளார்.

திட்டமிட்டபடியே எஸ்-400 அமைப்பு இந்தியா வரும் என அவர் உறுதிபட கூறியுள்ளார்.சுமார் 5.43 பில்லியன் டாலர்கள் செலவில் இரஷ்யாவிடம் இருந்து 5 S-400 அமைப்புகளை வாங்க கடந்த 2018 அக்டோபர் 5ல் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.

எஸ்-400 அமைப்பு எதிரியின் போர்விமானங்கள்,ஆளில்லா விமானங்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் ஆகியவற்றை வானிலேயே தடுத்து அழிக்க கூடியது.