பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் இடையே மோதல் இரு தரப்பிலும் உயிர் சேதம் !!

  • Tamil Defense
  • August 1, 2020
  • Comments Off on பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் இடையே மோதல் இரு தரப்பிலும் உயிர் சேதம் !!

ஆஃப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் மாகாணம் பாகிஸ்தான் எல்லையோர பகுதியில் உள்ளது. இந்த மாகாணத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் இடையே நமது வாகா சாவடி போல் ஒர் சாவடி உள்ளது.

இருதரப்பிலும் இருந்து சொந்த பந்தங்கள், நண்பர்கள் ஆகியோர் இந்த சாவடி வழியாக கடந்து சென்று சந்தித்து கொள்வது வழக்கம்.

அந்த வகையில் ஈத் பெருநாளுக்காகவும் இரு தரப்பிலும் மக்கள் கூடினர் ஆனால் கொரோனா தொற்று காரணமாக சாவடியை கடக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

அப்போது இரு தரப்பு மக்களூம் ஏமாற்றத்துடன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பாகிஸ்தான் வீரர்கள் உடனே ஆப்கன் பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும்,

கலவரம் முற்றியதும் கலவரத்தை அடக்க ஆஃப்கானிஸ்தான் படையினரும் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

இதில் 7 பாகிஸதானியர்கள், 15 ஆஃப்கானியர்களும் உயிர் இழந்துள்ளனர்.

பாகிஸ்தான் படையினர் பொறுமையாக செயல்பட்டு இருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என கூறப்படுகிறது .