இந்திய சீனா எல்லையில் காரகோரம் அருகே உள்ள கடைசி இந்திய நிலைக்கு அருகே 16000 அடி உயரத்தில் சின்னூக் வானூர்தி இரவு நேர ஆபரேசன்களுக்காக பறப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தௌலத் பெக் ஓல்டி பகுதியில் சீன இராணுவம் சாலை மற்றும் மற்ற கட்டுமானங்களை அதிகப்படுத்தி வருகிறது.
இங்கு பதற்றத்தை குறைக்க மேஜர் ஜெனரல் தலைமையில் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்துள்ளது.இரவு நேர ஆபரேசன்களுக்கும் அதிக உயரம் வாய்ந்த பகுதிகளில் பறக்கவும் சின்னூக் ஏற்றதாக உள்ளதால் நம்மால் எளிதாக சிறப்பு படைகளை முன்னனி பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியும்.
அப்பாச்சி வானூர்திகள் சூசுல் பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறது.தௌலத் ஓல்டி பகுதியில் சின்னூக் பாதுகாப்பு பணியில் உள்ளது.இந்த பகுதியில் ஏற்கனவே டி-90 மற்றும் ஆர்டில்லரிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.