சீனா வெளியேறும் வரை எல்லையில் வீரர்களை நிறுத்தி வைக்க திட்டம்

  • Tamil Defense
  • August 18, 2020
  • Comments Off on சீனா வெளியேறும் வரை எல்லையில் வீரர்களை நிறுத்தி வைக்க திட்டம்

எல்லையில் இருந்து சீனப் படைகள் பின்வாங்குவது வரை இந்திய வீரர்களை எல்லையிலேயே நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.உயர்மலை பகுதிகளில் எதற்கும் தயாராக வீரர்கள் எப்போதும் இருப்பர்.

இந்த எல்லைப் பிரச்சனை எளிதில் முடிவடையாது.சீனப்படைகள் வெளியேறும் வரை நமது பிரிவுகள் கிழக்கு லடாக் பகுதியில் இருக்கும் என இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.இராணுவம் ,வெளியுறவு மற்றும் இராணுவ அமைச்சகத்தை சேர்ந்த முக்கிய அதிகாரகளின் கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.கோக்ரா மற்றும் பங்கோங் பகுதியில் சீனா இன்னும் வெளியேறாமல் உள்ளது.

சீனா வெளியேற அடம்பிடித்து வருகிறது.தற்போது நான்கு மாதங்கள் ஆகியும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.இந்தியாவும் வர உள்ள குளிர்காலத்தை சமாளிக்க அனைத்து விதங்களிலும் தயாராக உள்ளது.