உத்தராகண்ட் மாநிலம் லிபுலெக் பகுதியில் படைகளை குவிக்கும் சீன ராணுவம் !!

  • Tamil Defense
  • August 1, 2020
  • Comments Off on உத்தராகண்ட் மாநிலம் லிபுலெக் பகுதியில் படைகளை குவிக்கும் சீன ராணுவம் !!

சீன ராணுவம் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலெக் பகுதியில் இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் சீன ராணுவம் ஒரு பட்டாலியன் அளவிலான வீரர்களை குவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சீன படையினரின் நடமாட்டமும் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில் எல்லை கட்டுபாட்டு கோடு பகுதிக்கு அப்பால் லிபுலெக், வடக்கு சிக்கீம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் சீன படைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறினார்.

மேலும் பாதுகாப்பு துறை வட்டார தகவல்களின் படி சீனா அக்ஸாய் சின் பகுதியிலும் வீரர்கள் மற்றும் தளவாடங்களை குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.