எல்லை முழுதும் இந்தியாவுக்கு எதிராக ஏவுகணை தளங்கள் அமைத்துள்ள சீனா-பதற்றம் அதிகரிப்பு

இந்தியாவுக்கு எதிரான இரண்டாம் மோதல் நடைபெற்றுள்ள நிலையில் எல்லை முழுதும் சீனப்பகுதியில் ஏவுகணை தளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.சிக்கிம்,அருணாச்சல பிரதேசம்,லடாக் மற்றும் உத்ரகண்ட் ஆகிய பகுதிகளில் புதிய ஏவுகணை தளங்கள் இந்தியாவிற்கு எதிராக முளைத்துள்ளன.

2017 டோகலாம் சண்டையின் போது வெறும் இரு ஏவுகணை தளங்கள் மட்டுமே இருந்தன.தற்போது இந்த நிலை மாறி எல்லை முழுதும் பல ஏவுகணை தளங்களை சீனா ஏற்படுத்தியுள்ளது.

உத்ரகண்டின் மானசரோவர் எதிர்புறத்தில் புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை கொண்ட தளம் ஏற்படுத்தியுள்ளது.நேபாளம்,பூடான் மற்றும் இந்தியாவின் சிக்கிம் ஆகியவற்றை எல்லையாக கொண்ட ஸிகேட்ஸ் என்னும் பகுதியில் புதிய தளம் வந்துள்ளது.பூடான் மற்றும் இந்தியாவின் சிக்கிம் ஆகியவற்றை எல்லையாக கொண்ட பாக்ரி என்னும் பகுதியில் புதிய ஏவுகணை தளம் உருவாக்கப்பட்டுள்ளது.அருணாச்சலின் எதிர்ப்புறம் யிங்ச்சி என்னுமிடத்திலும் புதிய தளம் உருவாகியுள்ளது.