சோதனையில் சீனாவின் முதல் டைப் 075 போர்க்கப்பல்

கடந்த 2011ல் தான் சீனா அதிகாரப்பூர்வமாக டைப்075 கப்பல் கட்டுமானத்திற்கான பணிகளை தொடங்கியது.ஹெலிகாப்டர் லேண்டிங் டோக் எனப்படும் இந்த கப்பல் 30000டன்கள் எடையுடையது.அதாவது ஒரு சிறிய விமானம் தாங்கி கப்பல் போன்றது.சீனா தனது நீர்நில தாக்கும் படைப்பிரிவின் பலத்தை அதிகரித்து வருகிறது.

28 வானூர்திகள் வரை இந்த கப்பலில் இயக்க முடியும்.அமெரிக்க கடற்படையின் எல்எச்ஏ கப்பலை விட சிறியதாகவும் பிரான்ஸ் நாட்டு இதே ரக கப்பலை விட சிறிது பெரிதாகவும் சீனா இந்த கப்பலை கட்டி வருகிறது.

வெகு வேகமாகவே சீனா இந்த போர்க்கப்பலை கட்டி முடித்துள்ளது.இதே ரகத்தின் இரண்டாவது கப்பல் விரைவில் கடலில் சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த டைப் 075 LHD கப்பல் முழுதும் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் சீனாவின் நீர்நில தாக்கும் பலன் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.