Breaking News

கராச்சி அருகே பாக் மற்றும் சீன கடற்படை கப்பல்கள் குவிப்பு !!

  • Tamil Defense
  • August 14, 2020
  • Comments Off on கராச்சி அருகே பாக் மற்றும் சீன கடற்படை கப்பல்கள் குவிப்பு !!

பாகிஸ்தானுடைய பிரதான துறைமுக நகரம் கராச்சி ஆகும், இங்கு தான் பாகிஸ்தான் கடற்படை தளமும் உள்ளது.

சமீப காலமாக பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே நெருக்கம் அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இந்த நிலையில் SEA GUARDIAN 2020 எனும் கடற்படை பயிற்சிக்காக பாகிஸ்தான் மற்றும் சீன கடற்படைகள் கராச்சி அருகே குவிந்துள்ளன.

Shadow Break International எனும் தனியார் கண்காணிப்பு நிறுவனம் செயற்கைகோள் மூலமாக சில புகைப்படங்களை எடுத்தது.

அதில் பாகிஸ்தான் கடற்படையின் அகோஸ்டா 70பி மற்றும் 90பி ரக நீர்மூழ்கிகள் மற்றும் சீன கடற்படை கப்பல்கள் குவிந்துள்ளன.

இதில் அகோஸ்டா 90பி ரக நீர்மூழ்கிகள் பாகிஸ்தானிடம் இருக்கும் நவீன தளவாடங்களில் ஒன்றாகும், பாகிஸ்தான் கடற்படை இவற்றில் ஐந்தை இயக்கி வருகிறது.

ஃபிரெஞ்சு தயாரிப்பான இவற்றில் AIP தொழில்நுட்பம் உள்ளது மேலும் இவை AS-39 Exocet கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் பாபர்-3 அணு ஆயுத க்ருஸ் ஏவுகணைகளை கொண்டிருக்கும்.

இதை தவிர சீனாவிடம் இருந்து 8 டைப்039 பி ரக நீர்மூழ்கிகளை வாங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.