
அமெரிக்க சுகாதாரத்துறை செயலர் அலெக்ஸ் அசார் தைவான் நாட்டிற்கு சென்றுள்ளார்.இதன் காரணமாக கோபமடைந்த சீனா தனது போர்விமானங்களை தைவானை ஒட்டி பறக்கச் செய்துள்ளது.இவற்றை தைவானின் ரேடார் அமைப்புகள் கண்டறிந்துள்ளன.
கடந்த நான்கு தலைமுறைகளில் ஒரு பெரிய அமெரிக்க அதிகாரி தைவான் செல்வது இதுவே முதல் முறையாகும்.தைவான் முழுதும் தனக்கே சொந்தம் எனக்கூறும் சீனா அமெரிக்காவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
J-11 மற்றும் J-10 தாக்கும் விமானங்கள் தைவான் நீட்சிக்கு அருகே பறந்துள்ளன.
தைவானுக்கு தற்போது அமெரிக்கா ஆயுதங்கள் முதல் அனைத்து உதவிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.