
1979க்கு பிறகு சமீபத்தில் ஒரு பெரிய அளவிலான அமெரிக்க அதிகாரி தைவான் நாட்டிற்கு கடந்த ஆகஸ்டு 9 அன்று சென்றார்.அதாவது அமெரிக்க சுகாதார துறை செயலர் அலெக்ஸ் அசார் தைவான் சென்றார்.
இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பற்றி நாம் அறியலாம்.
இரு நாடுகளும் பாதுகாப்பு,பொருளாதாரம்,சுகாதாரம் மற்றும் இன்னும் பல துறைகளில் இணைந்து செயல்பட உள்ளதாக அலெக்ஸ அசார் கூறியிருந்தார்.
இதனால் கோபம் கொண்ட சீனா போர்விமானங்களை அனுப்பியது.சீனாவின் “ஒரு சீனா” கொள்கைக்கு இது எதிராக இருப்பதாக கூறியது.
அலெக்ஸ் அசார் வருகைக்கு பிறகு தெற்கு சீன கடற்பகுதியில் சீன போர்க்கப்பல்களின் நடமாட்டமும் அதிகரித்தது.தற்போது புதிய ஏவுகணை அமைப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
தியான்லெய் 500 அல்லது ஸ்கை தன்டர் என அழைக்கப்படும் இந்த வான் பாதுகாப்பு அமைப்பு பல இலக்குகளை அழிக்க வல்லது என சீனா கூறுகிறது.இதை சீனாவின் நோரிங்கோ நிறுவனம் மேம்படுத்தியுள்ளது.
இது 240 sub-munitions, small air-dropped weapons கொண்டுள்ளது.ஏவப்பட்டால் 6,000 சமீ வரை பரந்து வெடிக்க கூடியது.
அமெரிக்கா தென்சீனக்கடற் பகுதியில் ஏற்படுத்தி வரும் பிரச்சனைகளில் இருந்து சீனாவை பாதுகாக்கவே இந்த ஆயுதம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக சீன இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.
ஒரு பக்கம் சீனா முழு தென்சீனக்கடல் மற்றும் தைவான் தன்னுடையது என கூறுகிறது.மறுபுறம் அமெரிக்கா போர்கப்பல்களை தென்சீனக்கடற்பகுதிக்கு அனுப்பி வருகிறது.