நேபாள இளைஞர்கள் ஏன் இந்திய இராணுவத்தில் இணைகின்றனர்? அறிய விரும்பும் சீனா

  • Tamil Defense
  • August 18, 2020
  • Comments Off on நேபாள இளைஞர்கள் ஏன் இந்திய இராணுவத்தில் இணைகின்றனர்? அறிய விரும்பும் சீனா

நேபாள இளைஞர்கள் ஏன் இந்திய இராணுவத்தில் இணைகின்றனர் என சீனா அறிய ஒரு புதிய குழுவை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த குழு இதை குறித்து ஆராய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக 12.7லட்சம் நேபாள ரூபாய் சீனா ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய-சீனப் பிரச்சனை முற்றி வருகிறது ஒரு பக்கம்.மறுபுறம் லிபுலேக் பகுதியில் இந்தியா சாலை அமைத்து வருவதால் இந்திய-நேபாள் உறவிலும் விரிசல் எழுந்துள்ளது.

நேபாளின் எந்த பகுதியில் இருந்து அதிகமாக இராணுவத்தில் இணைகின்றனர்.அவர்களின் சமுதாய மற்றும் பொருளாதார தகவல் குறித்து இந்த குழு ஆராயும்.

தற்போது 28000 நேபாள் கூர்கா வீரர்கள் இந்திய இராணுவத்தின் ஏழு ரெஜிமென்டுகளில் பணியாற்றி வருகின்றனர்.இந்த ரெஜிமென்டுகளில் 39 பட்டாலியன்களில் 50-60 சதவீதம் பேர் நேபாளத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

சராசரியாக ஒவ்வொரு வருடமும் 2000 நேபாள இளைஞர்கள் இந்திய இராணுவத்தில் இணைகின்றனர்.

இந்தியா-நேபாள உறவு மோசமடைந்து வரும் வேளையில் சீனா இந்த குழுவை அமைத்துள்ளது.

ஆனால் இந்த குழு இந்தியாவில் எந்த பாதிப்பும் ஏற்படுத்த போவதில்லை என முன்னாள் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கூர்கா வீரர்களின் விசுவாசம் என்றுமே சந்தேகத்துக்கு உரியது அல்ல..அவர்கள் எப்போது இராணுவத்திற்கு உண்மையானவர்கள் என லெப் ஜென் கூடா (ஓய்வு) அவர்கள் கூறியுள்ளார்.