
சனி இரவு முதல் பங்கோங் ஏரியின் தெற்கு கரை பக்கம் சீனா அதிக அளவிலான படைகளை குவித்து வருகிறது.எல்லை அமைப்பை மாற்ற முயன்ற சீனாவிற்கு தகுந்த பதிலடி வழங்கப்பட்டதாக இந்திய இராணுவமும் கூறியுள்ளது.
பேச்சுவார்த்தையின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவை சீன வீரர்கள் மீற முயன்றதாகவும் இதை தடுத்து நிறுத்தியதாகவும் இந்திய இராணுவம் கூறியுள்ளது.இந்திய இராணுவம் இவ்வாறு செய்தி வெளியிடுவது மிக அரிதாகும்.
சுசூல் செக்டார் எனப்படும் இந்த கிழக்கு பங்கோங் பகுதியில் மே மாதம் முதலே மோதல் நிகழ்ந்து வருகிறது.
எரிச்சலூட்டும் வகையில் சீன இராணுவம் நடந்து கொள்வதாக தகவல்கள் வெளியானாலும் மேற்கொண்டு எந்த தகவலும் இந்தியா வெளியிடவில்லை.மோதல் ஏற்பட்டதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.