சர்ச்சைக்குரிய தீவிற்கு குண்டுவீசு விமானம் அனுப்பிய சீனா-அமைதியை குழைப்பதாக வியட்நாம் குற்றச்சாட்டு

  • Tamil Defense
  • August 20, 2020
  • Comments Off on சர்ச்சைக்குரிய தீவிற்கு குண்டுவீசு விமானம் அனுப்பிய சீனா-அமைதியை குழைப்பதாக வியட்நாம் குற்றச்சாட்டு

தென்சீனக் கடல் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய பாராசெல் தீவுப் பகுதியில் சீனாவின் குண்டுவீசு விமானங்கள் இருப்பது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என வியட்நாமின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

மற்ற நாடுகள் கொரானா வைரசுடன் போராடி வரும் வேளையில் சீனா தென்சீனக் கடல் பகுதியில் இராணுவ பலத்தை அதிகரித்து போர்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.தவிர தென்சீனக் கடல் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளிடமும் எல்லைப் பிரச்சனையில் உள்ளது.

சீனா ஆயுதங்களையும் ,குண்டுவீசு விமானங்களையும் அனுப்புவது வியட்நாமின் இறையாண்மைக்கு எதிராக உள்ளது.தவிர இந்த பகுதியின் அமைதியையும் குழைக்கிறது என வியட்நாம் கூறியுள்ளது.

போர்விமானங்கள் தவிர குறைந்தது ஒரு எச்-6ஜே குண்டுவீசு விமானத்தை பாராசெல் தீவுக்கு அனுப்பியுள்ளது.

தற்போது சீன விமானங்கள் அந்த பகுதியில் பல்வேறு விதமான போர்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.