பின்வாங்குதலை மறந்துவிடுங்கள்: எல்லையில் புதிய போர்முனையை திறந்த சீனா

இதுநாள் வரை பங்கோங் ஏரியின் வடக்கு பகுதியில் மட்டுமே இந்தியா-சீனா பிரச்சனை நடந்து வந்தது.இந்தியா ரோந்து செய்து வந்த பகுதிகளை இடைமறித்து தற்போது அங்கிருந்து சீனா வெளியேற மறுத்து வருகிறது.

ஆனால் ஏரியின் தெற்கு பகுதியை முழுதாக இந்திய இராணுவம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.தற்போது இந்த பகுதிக்குள் தான் நுழைய சீன வீரர்கள் முயன்றுள்ளனர்.இது சீனாவின் நில கையகப்படுத்தும் மனநிலையை குறிக்கிறது.

தற்போது ஆகஸ்டு 29/30 நடந்த சம்பவத்தால் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையை உடனடியாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது இராணுவம்.இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த இராணுவம் தடைவிதித்துள்ளது.இராணுவம் மட்டுமே இந்த சாலையை உபயோகிக்கும்.

ஆகஸ்டு 29/30 அன்று தெற்கு பங்கோங் பகுதியின் எல்லை கோட்டை சீன வீரர்கள் மாற்ற முயற்சித்துள்ளனர்.இதை இந்திய வீரர்கள் தடுத்துள்ளனர்.இதன் பிறகு பதற்றம் அதிகரித்துள்ளது.

இரவில் இந்த பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு சீன வீரர்களின் நடமாட்டத்தை இந்திய வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.இவர்கள் இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்றுள்ளனர்.இதை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.அப்போது மோதல் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உனடியாக பிரச்சனை நடந்த பகுதிக்கு அதிக வீரர்களை இராணுவம் அனுப்பியுள்ளது.பிரைகேடு கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது.