அப்துல்கலாம் தீவை குறிவைக்கும் சீனா; கண்காணிப்பு அதிகரிப்பு

  • Tamil Defense
  • August 19, 2020
  • Comments Off on அப்துல்கலாம் தீவை குறிவைக்கும் சீனா; கண்காணிப்பு அதிகரிப்பு

சீனா அஸ்ஸாமில் உள்ள தேஸ்பூர் விமான தளம் மற்றும் இந்தியாவின் ஏவுகணை சோதனை தளமான கலாம் தீவு பகுதியையும் தீவிரமாக கண்காணித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த இரு இடங்களுமே இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான இடங்களாகும்.மியான்மரை ஒட்டியுள்ள சீனாவின் யுனான் பகுதியில் இருந்து சீனா இவ்விரு இடங்களையும் கண்காணித்து வருகிறது.

வீலர் தீவுகள் என முன்னர் அறியப்பட்ட அப்துல் கலாம் தீவில் தான் இந்தியா தனது அனைத்து ஏவுகணை சோதனைகளையும் செய்கிறது.இங்கு தான் அணுஆயுத சக்தி வாய்ந்த அக்னி ரக ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

தேஸ்பூர் விமான நிலையம் மக்கள் மற்றும் இராணுவ பயன்பாடு என இரு வழிகளிலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.விமானப்படையின் 106வது ஸ்குவாட்ரான் சுகாய் விமானங்கள் இங்கு தான் நிறுத்தப்பட்டுள்ளன.

எல்லையில் இருந்து 170கிமீ தொலைவில் மட்டுமே இருப்பதால் இந்த தளம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

டோகலாம் மோதலுக்கு பிறகு சீனா மியன்மர் எல்லையை ஒட்டி வெறும் 3கிமீ தொலைவில் புதிய ரேடார் நிலையத்தை அமைத்துள்ளது.இதன் மூலம் சீனா இந்தியப் பகுதிகளை கண்காணிக்க எண்ணுகிறது.

இங்குள்ள ரேடார்கள் உதவியுடன் சீனா இந்த இரு பகுதிகளையும் கண்காணித்து வருகிறது.