இந்திய எல்லையில் போர்விமானங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் சீனா

  • Tamil Defense
  • August 12, 2020
  • Comments Off on இந்திய எல்லையில் போர்விமானங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் சீனா

இந்திய சீன எல்லையில் தனது போர்விமானங்களின் எண்ணிக்கையை சீனா இரட்டிப்பாக்கி வருவதாக அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.ஜீலை 28ன் போது ஹோடன் விமான தளத்தில் சீனா 36 விமானங்களை நிறுத்தியுள்ளது.24 J-11 அல்லது J-16 விமானங்களுடன் ஆறு ஜே-8 விமானங்களும் ,2 Y-8G போக்குவரத்து விமானங்களும்,2 KJ-500 அவாக்ஸ் விமானங்களும் ,இரு Mi-17 வானூர்திகள் மற்றும் CH-4 தாக்கும் வானூர்திகளும் நிறுத்தியுள்ளது.

ஜீன் மோதலுக்கு முன் ஹோடன் தளத்தில் வெறும் 12 போர் விமானங்களை மட்டுமே நிறுத்தியிருந்தது சீனா.அதற்கு துணையாக எந்த விமானமும் நிறுத்தப்படாமல் இருந்தது.

இந்த வான்படையை சீனா இந்திய வான் தாக்குதல்களை ஒடுக்க உபயோகப்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.இந்த வான் படையை கொண்டு இந்திய படைகளையோ அல்லது சப்ளை லைன்களையோ தாக்க முடியாது மாறாக இந்தியாவின் வான் தாக்குதலை தடுக்கவே இந்த வான் படையை சீனா அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது இந்த படைகள் உதவியுடன் சீனா உளவு மற்றும் கண்காணிப்பு ஆபரேசன்களை நடத்தி வருகிறது.இந்த நிலை போராக வெடித்தால் இந்த வான் படைகள் பாதுகாப்பில் சீனா தனது படைகளை எல்லைக்கு நகர்த்தும்.

இந்த சீனப்படைகளுக்கு எதிராக இந்தியாவும் மிக்-29,சுகாய் உள்ளிட்ட முன்னனி விமானங்களை எல்லைக்கு நகர்த்தியுள்ளது.இந்திய எல்லைக்குள் நுழையும் எந்த சீன விமானங்களும் இந்த படையை முதலில் எதிர்கொள்ள வேண்டும்.

ரபேலை விட சீனாவின் ஐந்தாம் தலைமுறை விமானமான ஜே-20 நவீனமானது என சீன கூறினாலும் நமது ரபேல் தான் சிறந்தது என இந்திய ஆய்வாளர்கள் கூறுகின்றன.அதற்கு பல காரணங்களும் கூறுகின்றனர்.