சீனா தனது ஜே-20 ஐந்தாம் தலைமுறை விமானத்தை அடிப்படையாக கொண்டு இரு இருக்கைகள் கொண்ட விமானத்தை மேம்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முன் எச்சரிக்கை விமானமாக மேம்படுத்தப்பட உள்ள இந்த விமானம் மற்ற விமானங்களை வழிநடத்தும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் முதல் இரு இருக்கை ஸ்டீல்த் விமானமாக இது இருக்கும் என ஜே-20 விமானத் தயாரிப்பாளரான செங்டு விமான தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
இந்த புது வடிவ விமானம் இரஷ்யாவின் சு-34 சூப்பர்சோனிக் விமானத்தை அடிப்படையாக கொண்டு மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது.இந்த விமானத்தில் பாதுகாப்பிற்காக வான்-வான் ஏவுகணைகள் இணைக்கப்படும் எனவும் இது குண்டுவீசு விமானம் போல இருக்காது எனவும் கூறப்படுகிறது.
ஸ்டீல்த் விமானம் என்பதால் இதன் இறக்கைகளில் ஏவுகணைகள் இடம்பெறாது.அனைத்து ஏவுகணைகளும் விமானத்தின் வயிற்று பகுதிக்குள் இருக்கும்.