கல்வான் தாக்குதலை திட்டமிட்டே நடத்திய சீனா டி-15 டேங்குகளை திபத்தில் குவித்தது அம்பலம்

  • Tamil Defense
  • August 12, 2020
  • Comments Off on கல்வான் தாக்குதலை திட்டமிட்டே நடத்திய சீனா டி-15 டேங்குகளை திபத்தில் குவித்தது அம்பலம்

ஜீன் மாதம் கல்வானில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தது நாம் அறிந்ததே.அதே போல சீனப்பக்கமும் குறிப்பிட்ட அளவு உயிரிழப்பு ஏற்பட்டது.

பிங்கர் 4 ,கல்வான் மற்றும் ஹாட்ஸ்பிரிங் பகுதிகளுக்குள் சீனா நுழைவதற்கு முன்னரே பல்வேறு விதமாக முன்கட்ட நடவடிக்கைகளை நடத்தியதாக அமெரிக்க மற்றும் இந்திய உளவு துறைகள் கண்டறிந்துள்ளன.இந்த ஊடுருவலுக்கு துணையாக அதிநவீன ஆயுதங்களையும் சீனா முன்னரே குவித்துள்ளது தெரியவந்துள்ளது.எனவே திட்டமிட்டே சீனா கல்வான் தாக்குதலை நடத்தியுள்ளது.

திபத்தில் டி-15 இலகு ரக டேங்குகளை ஏற்கனவே சீனா குவித்துள்ளது.30 டன்கள் அளவும் 105மிமீ துப்பாக்கியும் இந்த டேங்க் கொண்டுள்ளது.மலைப்பகுதியில் செயல்பட ஏற்றது இந்த டேங்குகள்.

இந்த டேங்குகளுக்கு எதிராக இந்திய இராணுவம் டி-90 மற்றும் டி-72 டேங்குகளை எல்லைப் பகுதியில் குவித்துள்ளது.ஆனால் இவை எடை மிகுந்தது.

இந்த இலகுரக டேங்குகளுக்கு எதிராக இந்தியாவும் தற்போது இலகுரக டேங்குகள் வாங்க பரிசீலித்து வருகிறது.